
அங்காயப் பொடி என்பது பெருங்காயம் முதலான ஐந்து பொருட்களை வைத்து செய்கின்ற ஒரு மருந்து. வயிற்றுப் பிரச்னை உள்ளவர்கள் இதைச் சாதத்தில் பிசைந்து சாப்பிடுவார்கள்
என்னென்ன தேவை
- பச்சரிசி – 2 கப்
- நெய் – 2 டேபிள்ஸ்பூன்
- பெருங்காயப் பொடி – ஒரு டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 4
- சுண்டைக்காய் வத்தல் – 1 டேபிள்ஸ்பூன்
- மணத்தக்காளி வத்தல் – 1 டேபிள்ஸ்பூன்
- தனியா – 1 டேபிள்ஸ்பூன்
- வேப்பம்பூ – 1 டேபிள்ஸ்பூன்
- சுக்குப்பொடி – 1 டேபிள்ஸ்பூன்
- ஓமம் – 1 டேபிள்ஸ்பூன்
- சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
- மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
- கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
- உப்பு – தேவைக்கு
- கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு-தாளிக்க
செய்முறை
- பச்சரிசியை உதிரி உதிரியாக வடித்து ஒரு தட்டில் ஆற வைக்கவும்.
- வாணலியில் சிறிது நெய் விட்டு, உப்பு தவிர எல்லாவற்றையும் பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்.
- இதில் அளவாக உப்பு கலந்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.
- வாணலியில் நெய்விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டுத் தாளித்து, அதில் பொடியைக் கொட்டி, ஆறிய சாதத்தைச் சேர்த்துக் கிளறவும்.
மருத்துவப் பயன்கள்
அங்காயப் பொடி என்பது பெருங்காயம் முதலான ஐந்து பொருட்களை வைத்து செய்கின்ற ஒரு மருந்து. வயிற்றுப் பிரச்னை உள்ளவர்கள் இதைச் சாதத்தில் பிசைந்து சாப்பிடுவார்கள். மோரில் கலந்தும் குடிக்கலாம். இது வயிற்றை இதமாக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கும். உணவின் சத்துக்களை உடல் கிரகிக்க உதவும். கொழுப்பைக் கரைக்கும். ஜலதோஷத்தைத்தடுக்கும். ரத்த ஓட்டத்தை இயல்பாக்கி, குழந்தைகளைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
Leave a comment
You must login or register to add a new comment.